ஹைதராபாத், ஜூலை 30- தெலங்கானா பகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் டி. சீனிவாஸ் தோல்வியடைந்தார்.
மேலும், கடைசியாக வந்த தகவல்படி தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 5 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.