Tuesday, February 09, 2010 5:55 PM IST
Click
தற்போதைய செய்திகள்
மத்திய கல்வி நிலையங்களில் மாநிலங்களுக்கு 50% இடஒதுக்கீடு தேவை: கருணாநிதி

First Published : 30 Sep 2009 03:53:42 PM IST


திருவாரூர், செப்.30- மத்திய கல்வி நிலையங்களில் மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தொடக்க விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபோது கருணாநிதி பேசியதாவது:

1967ம் ஆண்டுக்கு முன் தமிழ்நாட்டிலே இருந்த கலைக் கல்லூரிகள் 105. 1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 1975ஆம் ஆண்டு வரை தி.மு.க. அரசு காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கலைக் கல்லூரிகளுடைய எண்ணிக்கை 78 ஆக மொத்தம் 183 கல்லூரிகள்.

1996-2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசின் சார்பில் இரண்டு  மகளிர்  கலை - அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, சுயநிதி அடிப்படையிலே 125 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

இவையெல்லாம் சொல்வதற்குக் காரணம், நாம் ஆரம்ப பள்ளிக்கூடத்தோடு நிற்கவில்லை. அதற்குப் பிறகு கிராமப்புறத்து மக்களை விழிப்புறச் செய்வதற்காக அவர்களுக்கு கல்வி அறிவு ஊட்டுவதற்காக கல்லூரிகளையும்  தொடங்கினோம். இப்பொழுது மேலும் அதை ஊக்கப்படுத்த அவர்களுக்கு ஆக்கம் அளிக்க பல்கலைக்கழகங்களையும் தொடங்கியிருக்கிறோம்.

மத்தியப் பல்கலைக் கழகத்தை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்ற  மத்திய  கல்வி அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நாடு முழுவதிலுமுள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களில்,  இந்திய மேலாண்மை நிறுவனங்களில், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில்  -  அவை  எந்த மாநிலத்தில் உள்ளனவோ, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 50 சதவிகித மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற அந்த உரிமையைக் கொடுத்து, தமிழ்நாட்டிலும் ஐம்பது சதவிகித மாணவர்களுக்கு, இங்கே அமையும் மத்திய பல்கலைக்கழகத்திலே இடம் ஒதுக்க வழிசெய்ய வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துக்கள்

தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள் நடத்தி வரும் வேறு மாநிலத்தவர்களின் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 50 சதவித வேலை வாய்ப்பை பெற்று தர அரசு சட்டம் இயற்ற வேண்டும். மலையாளிகளின் நகைக்கடைகள், மார்வாடிகளின் நிறுவனங்களில் எல்லாம் தமிழர்களை வேலைக்கு வைப்பதே இல்லை. தமிழன் வெறும் நுகர்வோராக மட்டும் இருக்கிறான். வேறு மாநிலத்தவன் இங்கே தொழில் செய்ய துவங்கும் போது உள்ளூர் வியாபாரி ஒருவன் பாதிக்கப்படுகிறான். அதோடு அங்கு பணி புரியும் சேல்ஸ்மேன்களும் பணி இழக்கிறார்கள். இது எதிர்காலத்தில் தமிழகத்தை ஆட்டி படைக்கப்போகும் விஷயம். அரசு இப்போதே விழித்து கொள்ள வேண்டும். இன்னும் சில கோரிக்கைகளும் உள்ளன

By mani
10/1/2009 1:13:00 AM

U read this BBc report . The North Indian thugs are serious are terrerist and hire peopel to murder in India from England ; but , Idian say Srilanka Tamils are tererist. Now , who the worst terrerist u judge Taminadu people about North Idian thugs.British Asians 'outsourcing murder' By Poonam Taneja BBC Asian Network Some say up to 100 overseas Indians are killed every year in Punjab A BBC investigation has uncovered the deadly practice of British Asians travelling to India to hire contract killers. Family and business associates, who are lured to the sub-continent, are often the targets. In a country where murder is cheaper and less fraught with risk, the perpetrators of these crimes are rarely brought to justice. Campaigners in both India and the UK believe this to have claimed the lives of hundreds of victims over several years. These armchair murder plots are hatched in the living rooms of Britain and executed mainly in the rural Indian state of Punjab.

By Mohamad- Chennai
9/30/2009 11:57:00 PM

கலைஞர் அவர்களுக்கு, நானும் சில கோரிக்கைகளை பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் அரசியல்வாதியாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் அரசாங்க பணி தரப்படவேண்டும். தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள் நடத்தி வரும் வேறு மாநிலத்தவர்களின் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 50 சதவித வேலை வாய்ப்பை பெற்று தர அரசு சட்டம் இயற்ற வேண்டும். மலையாளிகளின் நகைக்கடைகள், மார்வாடிகளின் நிறுவனங்களில் எல்லாம் தமிழர்களை வேலைக்கு வைப்பதே இல்லை. தமிழன் வெறும் நுகர்வோராக மட்டும் இருக்கிறான். வேறு மாநிலத்தவன் இங்கே தொழில் செய்ய துவங்கும் போது உள்ளூர் வியாபாரி ஒருவன் பாதிக்கப்படுகிறான். அதோடு அங்கு பணி புரியும் சேல்ஸ்மேன்களும் பணி இழக்கிறார்கள். இது எதிர்காலத்தில் தமிழகத்தை ஆட்டி படைக்கப்போகும் விஷயம். அரசு இப்போதே விழித்து கொள்ள வேண்டும். இன்னும் சில கோரிக்கைகளும் உள்ளன. எதிர்காலத்தில் தினமணி மூலமாகவே தெரியப்படுத்துகிறோம். இப்போதைக்கு இப்போதைய கோரிக்கைகளை பரிசீலனை செய்யுங்கள்.

By சேரசோழபாண்டியன்
9/30/2009 9:12:00 PM

India has dropped a graft case against an Italian businessman accused over an arms scandal which ended Rajiv Gandhi's prime ministership 20 years ago. NEXT SONIA AND QUATTROCHCHI DUM DUM DUM DUM DUMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

By reg
9/30/2009 7:40:00 PM

If smaller cities than Madras - Chennai can have both IIT & IIM, Why not here? CM pl fight for this first.

By S. Desikar
9/30/2009 5:39:00 PM

One disturbing aspect of the situation is, a Metro-city like Chennai does not have an IIM or equivalent management Institute of repute. I hope, when Foreign Universities Bill is passed, TN Government will go all out to bring a world-class University such as Harvard or Oxford or Cambridge , to open their overseas Universities. Then whatever Real-estate spaces are being built in the name of SEZs all along East Coast Road or Old Mahabalipuram Road can really be put to use. I learn that much of floor-space ( in excess of 1.3 million sq.feet , is it?) is unoccupied and a heavy investment , running in thousands of crores is locked up. Let the faulty planning ( or shall we say, allowing someone else to benefit through real-estate business at the cost of others?) be set right. Not a tall order.

By ASHWIN
9/30/2009 4:26:00 PM

VERU ENNA ENNA THEERMANANGAL IRRUKKU YOSIUNGAL, ANAITHAYUM IYATRIVIDUVOM PIRAGU ATHAI NIRAVETRA MUDINDAL PARKKALAM ILLAYEL ADUTHU ORU THEERMANAM PODUVOM , VAZHI IRUNTHAL THMIZHAN MANATHAYUM EDUKKALAM ENDRU ORU THEERMANAM PODALAME, PIRAGU EPPADI VOTTU VANGA MUDIYUM, MUTTAL MAKKALAI EMATRIYE VOTTU VANGALAM ADARKKU THEERMANAM IRUKKAVENDUME, MANADUGALAI MATTUM NADATHUVOM APPOZHUTHUTHAN VEVERU THEERMANAM PODAMUDIYUM. KADASIYIL MOTHAMA ORU MANADU NADATHI MUNBU POTTA THEERMANAM ANAITHAYUM MARUPADI PODUVOM.???????????????

By KUMARI
9/30/2009 4:20:00 PM

thanks to our c.m mr karunanidhi

By aravindangurumoorthy
9/30/2009 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்