Friday, September 10, 2010 2:38 AM IST
Click
விளையாட்டு
குதிரையேற்ற சம்மேளனத் தேர்தல்: பல்லம் ராஜூ விலகல்

First Published : 30 Jul 2010 12:00:00 AM IST


புது தில்லி, ஜூலை 29: குதிரையேற்ற சம்மேளன தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து விலகினார் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு.

 இந்திய குதிரையேற்ற சம்மேளனத்துக்கு 31-ம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்திய இணை அமைச்சர் பல்லம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். இதை அடுத்து முன்னாள் ஹாக்கி வீரர் பர்கத் சிங் தலைமையில் பல்வேறு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல்வாதிகள் விளையாட்டு சம்மேளனங்களில் பதவி வகிக்க கூடாது என அவர்கள் கூறினர்.  இதை அடுத்து பல்லம் ராஜு போட்டியில் இருந்து விலகினார். அவர் விலகி இருப்பது விளையாட்டு சம்மேளனங்களில் அரசியல்வாதிகள் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தங்கள் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி என பர்கத் சிங் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்