Wednesday, September 08, 2010 1:07 PM IST
Click
விளையாட்டு
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்

First Published : 30 Jul 2010 12:00:00 AM IST


நாட்டிங்காம், ஜூலை 29: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இங்கிலாந்து.

 இரு அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் நாட்டிங்காமில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. துவக்க ஆட்டக்ககாரர்களாக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸýம் குக்கும் களமிறங்கினர்.  45 ரன் எடுத்த நிலையில் ஸ்ட்ராஸ் முகமது ஆமிரின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஜோனதன் டிராட் 38 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் குக் 8 ரன்களுக்கும் பீட்டர்சன் 9 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும் முகமது ஆசிப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்