டிராவில் முடிந்தது இரண்டாவது டெஸ்ட்
First Published : 31 Jul 2010 02:10:41 AM IST
Last Updated :
டெஸ்ட் போட்டி டிராவானதும் கை குலுக்கும் இரு அணி வீரர்கள்.
கொழும்பு, ஜூலை 30: இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.முதல் டெஸ்டில் இலங்கை வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் திங்கள்கிழமை துவங்கியது.டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை தரப்பில் பரணவிதானா 100 ரன்களும், கேப்டன் சங்ககரா 219 ரன்களும், ஜெயவர்த்தனே 174 ரன்களும், சமரவீரா ஆட்டமிழக்காமல் 76 ரன்களும் எடுத்தனர்.÷இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸத் துவக்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 669 ரன்கள் எடுத்திருந்தது. இஷாந்த் சர்மா 10 ரன்களுடனும், பிரக்யான் ஓஜா ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். முன்னதாக இந்திய வீரர்கள் சேவாக் 99 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 203 ரன்களும், ரெய்னா 120 ரன்களும், கேப்டன் தோனி 76 ரன்களும் எடுத்தனர். 5-வது நாளான வெள்ளிக்கிழமை இந்திய அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்து விளையாடியது. இஷாந்த் சர்மாவும், பிரக்யான் ஓஜாவும் இலங்கை பெüலர்களை சோதித்தனர். இலங்கை வீரர்களின் பந்துவீச்சும் மெச்சும்படி இல்லை. பொறுமையாக ஆடிய இந்த ஜோடியின் ஆட்டத்தை இலங்கை வீரர் பெர்னாண்டோ முடிவுக்கு கொண்டு வந்தார். இஷாந்த் 18 ரன்கள் எடுத்திருந்தபோது சங்ககராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 174 பந்துகளைச் சந்தித்த இந்தஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மெண்டிஸ் 4 விக்கெட்டுகளும், தில்ஷன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் இரண்டாவது இன்னிங்ûஸத் துவக்கிய இலங்கை அணி ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. சங்ககரா 42 ரன்களுடனும், சமரவீரா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.இரட்டைச் சதமடித்த இலங்கை வீரர் சங்ககரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.மூன்றாவது டெஸ்ட் கொழும்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வென்றால் தொடர் டிராவில் முடியும். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலோ அல்லது இந்தியா தோற்றாலோ இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழக்க வேண்டியதிருக்கும்.சாதனை இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 707 ரன்கள் குவித்தது. இதுவே வெளிநாட்டு மண்ணில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 705 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா அணி 9 விக்கெட்டுகள் 726 ரன்கள் குவித்தது. இதுவே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்கள்.÷இரண்டாவது டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து 1,478 ரன்கள் குவித்தன. இந்திய அணி 707 ரன்கள் குவித்தது. இலங்கை அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 771 ரன்கள் குவித்தது.சச்சின் டெண்டுல்கர், குமார் சங்ககரா ஆகியோர் இரட்டைச் சதமடித்தனர். இந்தியாவின் ரெய்னா, இலங்கையின் பரணவிதானா, ஜெயவர்த்தனே ஆகியோர் சதமடித்தனர். இந்தியாவின் சேவாக், முரளி விஜய், தோனி, இலங்கையின் தில்ஷன், சமரவீரா ஆகியோர் அரைசதமடித்தனர்.