Saturday, July 31, 2010 4:17 AM IST
Click
தமிழகம்
விழுப்புரம்,​​ திருவாரூரில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: பிப்ரவரி 15-ல் தில்லி குழு ஆய்வு

First Published : 08 Feb 2010 12:00:00 AM IST


சென்னை,​​ பிப்.7:​ விழுப்புரம்,​​ திருவாரூரில் வரும் கல்வி ஆண்டு முதல் ​(2010-11) செயல்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்ய இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் வரும் 15-ம் தேதி வருகின்றனர்.

​ ​ தமிழகத்தில் சென்னை,​​ செங்கல்பட்டு,​​ திருச்சி,​​ தஞ்சாவூர்,​​ மதுரை,​​ தேனி,​​ கோவை,​​ சேலம்,​​ திருநெல்வேலி,​​ தூத்துக்குடி,​​ கன்னியாகுமரி,​​ வேலூர்,​​ தருமபுரி என மொத்தம் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.​ இந்தக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ​(15 சதவீத இடங்கள்)​ போக ​மொத்தம் 1,483 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் உள்ளன.

​ ​ ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதை தமிழக அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது.​ இதன்படி திருவாரூர்,​​ விழுப்புரம்,​​ சிவகங்கை,​​ பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் ​திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

​ ​ விழுப்புரம்,​​ திருவாரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடப் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன.​ இந்த இரண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 30 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட மொத்தம் ​200 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.​ எனவே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்.பி.பி.எஸ்.​ இடங்களின் எண்ணிக்கை 1,683-ஆக உயரும்.

​ ​ உலக பொருளாதார சரிவு காரணமாக பி.இ.​ படிப்பில் சேர விரும்பும் ​மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முதல் கணிசமாகக் குறைந்து வருகிறது.​ இதனால் கடந்த ஆண்டே அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்.​ இடங்களில் சேர 14,321 மாணவர்கள் விண்ணப்பிக்கும் அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டது.​ ​

​ ​ அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.10,000 மட்டுமே என்பதால்,​​ விழுப்புரம்-திருவாரூர் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கும் நிலையில்,​​ 170 எம்.பி.பி.எஸ்.​ இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.

ஏப்ரல் மாதத்துக்குள்...:​​ நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து அனுமதி அளிக்கும் நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் மாற்றி ​அமைத்துள்ளதால்,​​ இந்த மாதமே ஆய்வுப் பணி தொடங்குகிறது.​ விழுப்புரம்-திருவாரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை இந்த மாதம் ஆய்வு செய்து,​​ ​வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அனுமதி அளித்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்