Friday, September 10, 2010 3:11 AM IST
Click
தமிழகம்
மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: நரேஷ் குப்தா

First Published : 31 Jul 2010 12:00:00 AM IST


சென்னை, ஜூலை 30: மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

 உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். அவர் சனிக்கிழமை (ஜூலை 31) ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:

உள்துறை, மாநில திட்ட கமிஷன், பொதுத் துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பொறுப்பேற்றதும் அதிகமான பணிச்சுமை இருக்காது என நினைத்தேன்.

ஆனால், தமிழகத்தில் சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இதனிடையே, இடைத் தேர்தல்களும் அதிகமாக நடந்தன. சவாலான தேர்தல் பணியாக நாடாளுமன்றத் தேர்தல் இருந்தது.

சட்ட மேலவை அமைக்கும் பணிகள் இப்போது அதிகமாக உள்ளன. தேர்தலில் பணபலம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இதைக் கட்டுப்படுத்துவது சிரமமான விஷயம். இதுகுறித்து, புதிதாக வரும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

அரசியலில் ஆர்வம் இல்லை: பணியில் இருந்து விடை பெற்றதும் சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. புத்தகம் எழுதுவது பற்றி பிறகு யோசிப்பேன். அரசியலில் ஈடுபட எனக்கு ஆர்வமில்லை.

முதல்வரைச் சந்திக்கும் அளவுக்கு நான் பெரிய மனிதர் இல்லை என்றார் நரேஷ் குப்தா.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்