Wednesday, September 08, 2010 1:38 PM IST
Click
தமிழகம்
முதியவர்களுக்கு மருத்துவ காப்பீடு அவசியம்: சுகாதாரத் துறைச் செயலர் வி.கு. சுப்புராஜ்

First Published : 31 Jul 2010 01:23:47 AM IST


சென்னை, ஜூலை 30: முதியவர்களுக்கு மருத்துவ காப்பீடு மிகவும் அவசியமானது என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ் தெரிவித்தார். அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வி.கு. சுப்புராஜ் பேசியதாவது:

இந்தியாவை பொருத்தவரை, 60 வயதை கடந்த பெரும்பாலானோர் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் ஆகியவையே நம்முடைய ஆரோக்கியத்தையும், நோய்களையும் தீர்மானிக்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த அனைவரும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த பொருட்கள், அதிக இனிப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதை தடுக்க வேண்டும். இந்தியாவில், 6 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இதய நோயாலும், சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் உள்ள காசநோயாளிகளில் 25 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கத்தை போல நோய்களின் பெருக்கமும் அதிகமாகி வருகிறது.

நோய்கள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும். குறிப்பாக முதியவர்களிடத்தில் இந்த விழிப்புணர்வு மிகவும் குறைவு.

முதியவர்கள், தங்கள் நோய்களுக்கு மருத்துவர்களை அணுகுவதே இல்லை. இப்போது உள்ள பொருளாதாரமும் இதற்கு முக்கிய காரணம். இதனை கருத்தில் கொண்டே, அரசு மருத்துவமனைகளில் மிக குறைந்த செலவில் முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை வயதானவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் முதியவர்கள் கட்டாயம் தங்களுக்கு மருத்துவ காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கு பயன்படும்.

முதியவர்களுக்கு ஓய்வூதிய தொகை மிகவும் முக்கியம். வயதான காலத்தில் யார் கைவிட்டாலும், ஓய்வூதிய தொகை அவர்களை கைவிடாது. ஆனால் நம் நாட்டில் 50 சதவீத ஓய்வூதியதாரர்கள், தங்கள் ஓய்வூதியத் தொகையை முழுமையாக பெற முடிவதில்லை.

பணிக்காலத்தில் தங்களுடைய பணிகளை சரியாக செய்யாதிருத்தல், அரசின் விதிமுறைகள் தெரியாமல் தவறான முடிவை எடுத்தல் போன்ற சில நடவடிக்கைகளே அவர்களது ஓய்வு நேரத்தில் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலை உண்டாக்குகிறது. எனவே அரசுப் பணிகளில் இருப்பவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்தால், இது போன்ற சிக்கல்கள் வராமல் தடுக்கலாம் என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்