Wednesday, September 08, 2010 12:44 PM IST
Click
உலகம்
நீதிமன்றத்தில் பொன்சேகா ஆஜர்

First Published : 30 Jul 2010 05:52:57 AM IST


கொழும்பு, ஜூலை 29: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தொடரப்பட்டுள்ள கிரிமினல் வழக்கு விசாரணை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

÷மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தின் முன் பொன்சேகா ஆஜர்படுத்தப்பட்டார்.

÷வன்முறைக்கு பொது மக்களைத் தூண்டியதாக பொன்சேகா மீது தொடரப்பட்ட வழக்கில் அப்போது விசாரணை நடைபெற்றது என்று வழக்கறிஞர் லாதுவஹெத்தி கூறினார். இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும். அப்போது 20 சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள். இதில் வழக்கில் பொன்சேகா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

÷பொன்சேகா மீது ஏற்கெனவே ராணுவ நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ராணுவப் பணியிலிருந்து இருந்து கொண்டு அரசுக்கு எதிரான சதியில் ஈடுபட்டார் என்று ஒரு வழக்கும், தனது மருமகனின் நிறுவனத்துக்கு ராணுவ ஒப்பந்தத்தை வழங்கினார் என்று மற்றொரு வழக்கும் உள்ளது.

÷இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், பொன்சேகா கைது செய்யப்பட்டார். இப்போது ராணுவ சிறையில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா,÷இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் நோக்கத்தோடு தொடுக்கப்பட்டவை என்று மறுத்துள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்