Wednesday, September 08, 2010 12:44 PM IST
Click
உலகம்
பாகிஸ்தானில் நிலச்சரிவு: 48 பேர் பலி

First Published : 31 Jul 2010 12:00:00 AM IST


பெஷாவர், ஜூலை 30: பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள மலைப்பகுதி கிராமமான ஒலந்தாரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் 48 பேர் பலியாயினர்.

  கடந்த சில தினங்களாக பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே கைபர்-பாக்துன்கவா மாகாணத்தின் ஷங்லா மாவட்டத்தில் உள்ள ஒலந்தார் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 48 பேர் பலியாயினர். மீட்புக் குழுவினர் இதுவரை 16 பேரின் உடலை மீட்டுள்ளனர்.   இம்மழைக்கு இதுவரை, பாகிஸ்தானில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஷங்லா மாவட்டதில் மட்டும் 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர், பெருமளவுக்கு பயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்