Tuesday, February 09, 2010 5:55 PM IST
Click
வணிகம்
பெட்ரோல் விலை உயராது: தேவ்ரா

First Published : 17 Oct 2009 10:23:00 PM IST

Last Updated : 19 Oct 2009 06:32:42 PM IST

புது தில்லி, அக். 16:   சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா கூறினார்.

  தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 78 டாலராக உயர்ந்துள்ளது. இருப்பினும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் அதன் மூலம் 10 சதவீதம் ஈடுகட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவைச் சந்தித்தபோது எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 126 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இது தற்போது ரூ. 96 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

  தற்போது ரூபாயின் மாற்று மதிப்பு மிகவும் செüகர்யமான நிலையில் உள்ளது. இதே நிலை தொடர வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் சர்தக் பெஹுரியா தெரிவித்தார்.

  நடப்பு நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ரூ. 21,825 கோடி நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டது. தற்போது இது ரூ. 19,790 கோடியாகக் குறைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் ரூ. 204.51-ம் மண்ணெண்ணெய் விற்பனை மூலம் லிட்டருக்கு ரூ. 16.14-ம் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

  பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் தினசரி ரூ. 52 கோடி நஷ்டம் ஏற்படுவதாக பெஹுரியா மேலும் கூறினார்.

  தற்போதைய நிலவரப்படி மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ. 34,820 கோடி நஷ்டம் ஏற்படுவதாக அவர் கூறினார்.

  எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நஷ்டம் கடன் பத்திர வெளியீடு மூலம் ஈடுகட்டப்படும் என்று பெட்ரோலியத்துறைச் செயலர் ஆர்.எஸ். பாண்டே தெரிவித்தார்.
கருத்துக்கள்

நம் நாட்டின், சில பெட்ரோலிய நிறுவனம் நஸ்டதில் இயங்குவதாக நம் நாட்டு மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுக்குகிறார்கள் ,கடந்த் வருடம் உலக சந்தையில் கட்சா என்னையின் விலை 148.டாலருக்கு விற்றபோது ,நம் நாட்டு மத்திய அரசுவிடம் பெட்ரோலிய நிறுவனம் நஸ்டதில் இயங்குவதாக கூறி பெட்ரோல் விலையை ஏற்றினார்கள் ,கடந்தா சில மாதங்களாக உலக சந்தையில் கட்சா என்னையின் விலை .50.டாலருக்கு விற்றபோது கூட நம் நாட்டு அரசு பெட்ரோல் விலை குறைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை, இன்றும் விலை 80,டாலருக்கு மேல் ஏறவில்லை ,ஆனால் இந்த் பெட்ரோலிய நிறுவனம் நஸ்டதில் இயங்குவதாக நம் நாட்டு மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்து விலையை ஏற்றுகிறார்கள், இதை ஏன் நம் நாட்டில் உள்ள அனைத்து செய்தி உடகங்கள் ஏன் முறையான தகவலை நம் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை என தெரியவில்லை, இப்போதும் உலக சந்தையில் கட்சா என்னையின் விலை 148..டாலருக்கு மேல் விற்றால் தான் விலை ஏற்ற வேண்டும் ,ஆனால் நம் நாட்டின் மக்களில் அதிகமான வர்களுக்கு உலக நிலவரம் தெரியததிநால் நாம் ஏமார்ந்து கொண்டு உல்லோம், யார் தான் இந்த் நிலையை மாற்ற முன்வருவார்க்கலோ/

By AbooAbdulRahmaan
10/19/2009 12:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்