Tuesday, February 09, 2010 9:21 PM IST
Click
சென்னை
மெரீனா கடற்கரையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் முதல்வருக்கு அழைப்பு

First Published : 04 Nov 2009 03:12:26 AM IST


சென்னை, நவ. 3: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை (ஜனவரி 14) சென்னை மெரீனா கடற்கரையில் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.

  அதில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ள வேண்டும் என அந்தச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  தமிழக திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் விவரம்:

  வரும் ஜூன் மாதம் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பங்கு பெற்று ஒரு வரலாற்று நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

  ஆங்கிலப் புத்தாண்டு, சீனப் புத்தாண்டு போல தமிழ்ப் புத்தாண்டையும் வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். அதற்காக, வரும் 2010-ம் ஆண்டு ஜனவரி 14, 15, 16 தேதிகளில் மெரீனா கடற்கரையில் தமிழின் சிறப்புகளையும் தமிழ்ப் பண்பாட்டையும் விளக்கும் கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் போன்றவற்றை நடத்த அனுமதி அளித்து, அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்