சென்னை பல்கலை.யின் இலவச கல்விக்கு ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி உதவி
First Published : 10 Jul 2010 02:46:04 AM IST
Last Updated :
ஜெயகோபால் கரோடியா அறக்கட்டளை புத்தக வங்கி சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இலவச புத்தகங்களை வழங்கி கல்லூரி மாணவிகளுடன் பேசுகி
சென்னை, ஜூலை 9: சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்துக்கு ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி உதவுகிறது. ஜெயகோபால் கரோடியா புத்தக வங்கி சார்பில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 2010-11-ம் கல்வி ஆண்டுக்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அண்ணா நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலாய பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம், இப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி பேசுகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 5 மாணவர்களுக்கு இந்த ஆண்டுமுதல் இலவச கல்வி வழங்கப்படவுள்ளது. கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. அவர்களுக்கு புத்தகம் வாங்குவதுதான் செலவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு புத்தக வங்கி உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். துணைவேந்தரின் வேண்டுகோளை ஏற்ற புத்தக வங்கி நிர்வாகம், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வியில் பயிலும் மாணவர்களுக்கும் புத்தக வங்கியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.