Friday, September 03, 2010 1:55 PM IST
Click
சினிமா
10-வது ஆண்டில் "கல்யாணமாலை'

First Published : 03 Oct 2009 11:01:03 PM IST


சன் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கல்யாணமாலை' நிகழ்ச்சி, நேயர்களின் வரவேற்போடு 10-வது ஆண்டை எட்டியுள்ளது. இதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில்  பிரமாண்டமான விழா நடைபெறுகிறது.
  ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 5 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, "கல்யாணமாலை' மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.
  "கல்யாணமாலை' நிகழ்ச்சி மூலமாக இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பும் இசையமைப்பாளர் கங்கை அமரன் தலைமையில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடி, பேசி கலக்கும் புதுமையான பட்டிமன்றமும் இந்த விழாவில் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்