Friday, September 03, 2010 2:10 PM IST
Click
சினிமா
ஆந்திர வெள்ளம்: தமிழ்த் திரைப்பட அமைப்புகள் 25 லட்சம் உதவி

First Published : 10 Nov 2009 11:50:35 PM IST


சென்னை, நவ. 10:  ஆந்திர மாநிலத்தில் புயல், வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழ்த் திரைப்பட அமைப்புகள் ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்கியுள்ளன. இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
  ஆந்திரத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அண்மையில் அங்கு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம், தென்னிந்திய வர்த்தக சபை சார்பில் ரூ.10 லட்சம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையாக தெலுங்கு இயக்குநர் தாசரி நாராயணராவ், நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்