மன்மோகன், சோனியா இன்று ஆந்திரம் வருகை
First Published : 04 Sep 2009 01:18:00 AM IST
Last Updated :
புது தில்லி, செப். 3: விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை ஆந்திரத்துக்கு வருகை தர உள்ளனர். ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் ஆந்திரத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங், சோனியா காந்தியின் வருகையை முன்னிட்டு ஹைதராபாதில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.