நளினியுடன் சந்திப்பா? ராகுல் பதில்
First Published : 11 Sep 2009 02:13:03 AM IST
Last Updated :
சென்னை, செப். 10: ""ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் நளினியைச் சந்திக்கும் எண்ணமில்லை'' என்று ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, வேலூருக்கு புதன்கிழமை சென்றார். அப்போது, அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாக தகவல் பரவியது. இது தொடர்பாக, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் அளித்த பதில்: ""நளினியை நான் சந்திக்கவும் இல்லை, அப்படிச் சந்திக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. நான் சந்திக்கப் போவதாக, பத்திரிகைகள்தான் செய்தி வெளியிடுகின்றன'' என்றார்.