Friday, September 03, 2010 2:12 PM IST
Click
சென்னை
புதுச்சேரிக்கு என்ஐடி சோனியாவுக்கு அமைச்சர் நன்றி

First Published : 22 Sep 2009 12:16:00 AM IST


 புதுச்சேரி, செப். 21: புதுச்சேரியில் என்ஐடி அமைக்க நடவடிக்கை எடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் நன்றி தெரிவிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

 அவரது அறிக்கை:

 புதுச்சேரியில் தேசிய தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதை ஏற்று மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல், மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார் ஷாஜாகான்.

 முன்னாள் எம்.பி. ராமதாஸ்

 முன்னாள் எம்.பி. பேராசிரியர் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கும் முடிவை வரவேற்றுள்ளார்.

 ""இந்த நிறுவனம் அமைக்க வேண்டும் என்று எம்.பி.யாக இருந்தபோது பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அக் கோரிக்கை நிறைவேறுவது மகிழ்ச்சி. இந்த நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு ரூ.300 கோடி செலவிடும். இதனால் புதுச்சேரி ஒரு கல்வி மண்டலாமாக உருவாகும் வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்