Tuesday, February 09, 2010 9:20 PM IST
Click
சென்னை
பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவத்தினர் இருவர் உள்பட 4 பேர் சாவு

First Published : 24 Sep 2009 01:26:00 AM IST


ஸ்ரீநகர், செப். 23:  ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜரும், வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

  வடக்கு காஷ்மீர் பத்திபோரா மாவட்டத்தின் எல்லையோர கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

  இதனையடுத்து ராணுவ வீரர்களும், போலீஸôரும் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

  இந்த துப்பாக்கிச் சண்டை புதன்கிழமை காலை வரை நீடித்தது. இதில் ராணுவ மேஜர் ஜே.எஸ். சூரியும், வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.

  பின்னர் அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்