Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
சென்னை
பயங்கரவாதத்தை கைவிடுங்கள்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை

First Published : 27 Sep 2009 09:12:00 PM IST


பிட்ஸ்பர்க், செப். 26:    அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதையே எப்போதும் கொள்கையாகக் கொண்டிருப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் தெரிவித்தார்.

  அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் ஜி-20 மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்த பின்னர் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

  நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) சந்தித்துப் பேசவுள்ளனர்.

  இதுபோன்ற நிலையில் பாகிஸ்தானுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

  மேலும் அவர் கூறியது:

  அண்டை நாடான பாகிஸ்தானுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பு மனநிலைதான் தடைக்கல்லாய் உள்ளது.

  கடந்த ஆண்டு நவம்பர் 26-ல் மும்பையில் பயங்கரவாதிகளால் துயரமான நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. இதற்கான சதித் திட்டம் பாகிஸ்தான் மண்ணில்தான் தீட்டப்பட்டது. இதை முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் ஒப்புக்கொண்டது.

  மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பிருப்பதற்கான உறுதியான ஆதாரங்களும் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டுள்ளது.

  மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது. எனினும் இதுவரை எவ்வித பலனும் இல்லை. "ஆதாரம் போதாது' என்பதையே தொடர்ந்து சொல்லி மும்பை தாக்குதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாகிஸ்தான் தட்டிக்கழித்து வருகிறது.

  மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்காதவரை சுமுக பேச்சுவார்த்தையை தொடங்க இயலாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார் மன்மோகன் சிங்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்