Saturday, July 31, 2010 4:18 AM IST
Click
சென்னை
சுமைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்

First Published : 06 Oct 2009 11:56:00 PM IST


HTML clipboard

 கடலூர், அக். 5: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது.

 இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் பணிபுரியும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் 300 பேர், திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்தனர்.

 அரசு ஊழியர்களுக்கான சலுகைகள், பணி நிரந்தரம், ஓய்வூதியம், ஊதிய உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்ககைகளுக்காக இந்த 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, அங்கன்வாடி மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்து இருந்தது.

 கடலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்குகளில் இருந்து நாளொன்றுக்கு 225 டன் ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

 அதேபோல் சேமிப்புக் கிடங்குகளுக்கு 225 டன் பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டு உள்ளது.

 மேலும் சத்துணவுக் கூடங்கள், அரசு விடுதிகள், மற்றும் போலீஸ் ரேஷனுக்கு பொருள்கள் எடுத்துச் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது.

 வேலைநிறுத்தம் செய்த சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்