Friday, September 03, 2010 2:08 PM IST
Click
சென்னை
கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

First Published : 08 Oct 2009 12:10:39 AM IST


சிதம்பரம், அக். 7:  கேரளத்தில் உள்ள நிஸ்ட் (சஐஐநப) என்ற ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய நிறுவனத்துடன் இணைந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மெக்னீசியம் மற்றும் இலகு உலோக கலவைகள் பற்றி கூட்டாய்வு மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

  ""இந்த ஒப்பந்தம், மெக்னீசியத்துடன் லித்தியம் போன்ற மென் உலோகக் கலவைகளை உருவாக்கி விண்ணியல், அணுக்கருவியல், மின்னியல், இயந்திரவியல் துறைகளில் அதன் பயன்பாடு பற்றிய ஆய்வுகளை செய்ய வழிவகுத்துள்ளது.

  மேலும் ஒப்பந்தம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தியியல் பொறியியல் புலத்திற்கு ரூ.4 கோடி மதிப்பிலான ஆய்வு திட்டங்கள், அரசு நிறுவனங்கள் மூலமும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் டி.எஸ்.டி. ஃபிஸ்ட் மூலமும் கூர்முனை ஆய்வுக்கான நிறுவன செலவுகள் வழங்கப்பட்டுள்ளது'' என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.

  பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் ராமநாதன் முன்னிலையில் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, நிஸ்ட் நிறுவன இயக்குநர் பி.சி.பாய் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

  இந் நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன், உற்பத்தியியல் துறைத் தலைவர் கி.ரகுகாந்தன், கேரளத்தைச் சேர்ந்த முதுநிலை அறிவியல் அறிஞர் யு.டி.எஸ்.பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்