Tuesday, February 09, 2010 9:35 PM IST
Click
சென்னை
பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம்

First Published : 11 Oct 2009 12:22:05 AM IST


புதுச்சேரி, அக்.10: புதுச்சேரி என்.சி.சி. குழும மாணவர்களின் பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

  புதுச்சேரி மாநில என்.சி.சி. கடற்படை, தரைப்படை சார்பில் பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம், இந்திரா காந்தி சிலை சதுக்கங்களில் இருந்து புறப்பட்டது. கல்வித்துறை இயக்குநர் எஸ்.சுந்தரவடிவேலு கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கர்னல் தத் தலைமை வகித்தார். என்.சி.சி.அதிகாரிகள் ஆனந்த், அதிகாரி சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களில் இருந்து 2 பிரிவுகளாக ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ்காந்தி சிலையில் புறப்பட்ட ஊர்வலம் வள்ளலார் சாலை வழியாக காந்தி சிலையை அடைந்தது.

  இந்திரா காந்தி சிலையில் புறப்பட்ட ஊர்வலம் பேருந்து நிலையம், புஸ்ஸி வீதி வழியாக கடற்கரைச் சாலை காந்தி சிலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்த பேனர்களை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். மக்களிடம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்