பணத்தை சேலையில் சேமிக்க வேண்டாம்
First Published : 14 Oct 2009 12:15:00 AM IST
Last Updated :
HTML clipboard
காஞ்சிபுரம், அக். 13: குடும்ப வருவாயில் மிச்சம் உள்ள பணத்தை பெண்கள் தங்கள்
சேலை மடிப்பில் வைத்து சேமிக்க வேண்டாம் என்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை
மண்டல அலுவலர் டி.வி. நாகராஜன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டார்.
காஞ்சிபுரத்தில் செவிலிமேடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை சார்பில்
நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி அவர் பேசியதாவது:
இயல்பாகவே சேமிக்கும் பழக்கம் உடைய பெண்கள், தங்கள் கணவர் தரும் மாத ஊதியத்தை
மாதம் முழுவதும் செலவு செய்தது போக, மீதமுள்ள பணத்தை சேமிக்க சேலை மடிப்பில்
வைப்பார்கள். இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், அங்கு வைப்பதை விட அந்த பணத்தை
வங்கியில் சேமித்தால், அவர்களுக்கும் பலனளிக்கும்; வங்கிக்கும் பலனளிக்கும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வங்கிக்கான உறவு பலப்படும்போதுதான் மகளிருக்கு
எளிதில் வங்கிக் கடன் கிடைக்கும் என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செவிலிமேடு கிளை முதுநிலை மேலாளர் ஆர்.தங்கராஜ்,
முதன்மை அலுவலர் லாரன்ஸ், உதவி மேலாளர் கே.ஜோதி, நாடு தொண்டு நிறுவன இயக்குநர்
மகேஸ்வரி அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் மொத்தம் 35 குழுக்களுக்கு ரூ.36.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.