Friday, September 03, 2010 2:00 PM IST
Click
கோயம்புத்தூர்
பள்ளி ஆசி​ரி​யர்​கள் தர்ணா

First Published : 22 Nov 2009 01:09:10 AM IST


ஈரோடு,​ நவ. 21: அனைத்​துப் பள்​ளி​க​ளி​லும் கலைப்​பி​ரிவு பாடங்​க​ளைத் துவக்​கு​தல் உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி ஈரோட்​டில் பள்ளி ஆசி​ரி​யர்​கள் சனிக்​கி​ழமை தர்​ணாப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.

தமிழ்​நாடு முது​நி​லைப் பட்​ட​தாரி ஆசி​ரி​யர் கழ​கம் சார்​பில் ஈரோடு மின்​வா​ரிய தலை​மைப் பொறி​யா​ளர் அலு​வ​ல​கம் முன் நடை​பெற்ற தர்​ணாப் போராட்​டத்​துக்கு,​ கழக மாவட்​டத் தலை​வர் இரா.பெ.வெங்​க​டா​ச​லம் தலைமை வகித்​தார். மாநி​லத் துணைத் தலை​வர் கே.ஏ.மதி​ய​ழ​கன் முன்​னிலை வகித்​தார். அகில இந்​திய மாநில அரசு ஊழி​யர்​கள் சங்​கப் பொதுச்​செ​ய​லர் ஆர்.முத்​து​சுந்​த​ரம்,​ தமிழ்​நாடு முது​நி​லைப் பட்​ட​தாரி ஆசி​ரி​யர் கழக மாவட்​டத் தலை​வர் எஸ்.சுப்​பி​ர​ம​ணி​யன்,​ அரசு ஊழி​யர் சங்க மாவட்​டத் தலை​வர் மூ.சீனி​வா​சன்,​ இடை​நிலை ஆசி​ரி​யர் சங்க மாநில இணைச் செய​லர் டி.அலெக்​ஸôண்​டர் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

முது​நி​லைப் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு உரிய பதவி உயர்​வு​களை உட​ன​டி​யாக வழங்​கு​தல்,​ முதன்​மைக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ள​ராக மேல்​நி​லைப் பள்ளி தலைமை ஆசி​ரி​யரை நிய​ம​னம் செய்ய வெளி​யி​டப்​பட்ட அர​சா​ணையை உட​ன​டி​யாக நடை​மு​றைப்​ப​டுத்​தல்,​ மத்​திய அரசு ஆசி​ரி​யர்​க​ளுக்கு இணை​யான ஊதி​யம்,​ பிற படி​கள் வழங்​கு​தல்,​ அனைத்​துப் பள்​ளி​க​ளி​லும் கலைப்​பி​ரிவு பாடங்​க​ளைத் துவக்கி,​ குறைந்​தது 10 முது​நி​லைப் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​களை நிய​மித்​தல்,​ காலி​யாக உள்ள ஆசி​ரி​யர் மற்​றும் அலு​வ​லர் பணி​யி​டங்​கள் அனைத்​தை​யும் நிரப்​பு​தல்,​ ஆதி​தி​ரா​விட நலப் பள்​ளி​க​ளில் தேர்ச்சி விழுக்​காட்​டைக் கார​ணம் காட்டி ஆசி​ரி​யர்​கள் மீது எடுக்​கப்​பட்ட ஒழுங்கு நட​வ​டிக்​கை​க​ளைக் கைவி​டு​தல்,​ புதிய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தைக் கைவி​டு​தல்,​ அர​சின் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்தை தனி​யா​ரி​டம் ஒப்​ப​டைக்​கா​மல்,​ அரசே ஏற்று நடத்​து​தல் உள்​ளிட்ட கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி தர்​ணாப் போராட்​டம் நடை​பெற்​றது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்