இக்னோ: பி.எட். நுழைவுத் தேர்வு முடிவுகள்
First Published : 20 Oct 2009 10:00:27 AM IST
Last Updated :
மதுரை, அக். 19: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பி.எட். சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ண்ஞ்ய்ர்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் தகுதியான மாணவர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு இக்னோ மண்டல மையத்தின் 0452-2380387 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளளாம்.