Friday, September 03, 2010 2:00 PM IST
Click
திருநெல்வேலி
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குமரியில் இருந்து பிரசார பயணம் தொடக்கம்

First Published : 28 Oct 2009 12:27:50 AM IST


கன்னியாகுமரி, அக். 27: இலங்கை முள்வேலி முகாமில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு வாகன விழிப்புணர்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  காந்தி மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.சந்திரபாபு தலைமை வகித்தார். கன்னியாகுமரி நகர மதிமுக செயலர் எஸ்.அருள்ராஜ் வரவேற்றார்.

  பாமக மாவட்டச் செயலர் (கிழக்கு) சோ.சுரேஷ், எம்.பி.ரவி (மேற்கு) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

  பிரசார பயணத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.

  கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு பிரசார பயணத்தை தொடக்கிவைத்தார்.

  மாநில மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத், பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் அ.வியனரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலர் கோ.பழனிச்சாமி, மாவட்ட மதிமுக செயலர் எஸ்.ரத்தினராஜ், நாகர்கோவில் நகர மதிமுக செயலர் என்.தில்லைசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்