Tuesday, February 09, 2010 8:16 PM IST
Click
திருச்சி
அரசு மகளிர் கல்லூரியில் பி.எட் பயிலரங்கம்

First Published : 16 Oct 2009 07:21:59 AM IST


கரூர், அக்.15:   கரூர் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்க பி.எட்., முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

  பல்கலைக் கழகத்தின் பி.எட். கல்வி மையம் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் இரண்டாண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றவர்கள் பி.எட்.வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, கலந்தாய்வு வகுப்புகள் நடைபெற்றன.

  12 நாள்கள் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழாவுக்கு கல்லூரித் தாளாளர் கோதைநடேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மேரிகரோலின், பல்கலைக்கழக விரிவுரையாளர் பி. தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பாரதிதாசன் பல்கலை. ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பி. நடேசன், ந. சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பாளராக பங்கேற்றுப் பேசுகையில், உலகத்திலுள்ள பணிகளில் தலைசிறந்த பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் தங்களை அர்பணித்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்றனர்.

  மாணவர் த. பூமிநாதன் வரவேற்றார். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்