Tuesday, February 09, 2010 9:35 PM IST
Click
திருச்சி
மயிலாடுதுறை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

First Published : 30 Oct 2009 01:27:58 AM IST


திருச்சி, அக். 29:   திருச்சியிலிருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயிலுக்கு வியாழக்கிழமை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸôர் சோதனை மேற்கொண்டனர்.

  ஏறத்தாழ ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்ததையடுத்து ரயில் புறப்பட்டுச் சென்றது.

  திருச்சி- மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் தினமும் காலை 8 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு திருச்சியை வந்தடையும்.

  பின்னர், திருச்சியிலிருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, 3.30 மணிக்கு மயிலாடுதுறையைச் சென்றடையும். தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து மைசூர் விரைவு ரயில் என்ற பெயரில் திருச்சி வழியாக மைசூர் செல்லும்.

  இந்நிலையில், வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் ரயில்வே "ஹெல்ப் லைன்' அழைப்புக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், திருச்சி- மயிலாடுதுறை விரைவு ரயிலில் எஸ்-10 பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.  இதையடுத்து, திருச்சி ரயில்வே போலீஸôர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நான்காவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த விரைவு ரயிலில் சோதனை செய்தனர்.

  ரயிலில் இருந்த பயணிகளை கீழே இறங்கச் செய்த போலீஸôர் "மெட்டல் டிடெக்கர்' கருவி மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் அனைத்துப் பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

  ஏறத்தாழ ஒரு மணி நேர சோதனைக்குப் பிறகு ரயிலில் வெடிகுண்டு ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது. பலத்த சோதனைக்குப் பிறகு பயணிகளை ரயிலில் ஏற போலீஸôர் அனுமதித்தனர்.  இதையடுத்து, பிற்பகல் 1.05 மணிக்கு மயிலாடுதுறை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. வழக்கமான நேரத்துக்கே ரயில் புறப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

  ஆனால், எஸ். 10 மற்றும் எஸ். 9, எஸ். 11 ஆகிய பெட்டிகளில் பயணிகள் ஏற போலீஸôர் அனுமதிக்கவில்லை.

  இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை பாதுகாப்பு அதிகாரி சி.ஆர். காந்தி கூறியது:

  "ரயில்வே போலீஸôருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சோதனை நடத்தினர். ரயிலில் வெடிபொருள்கள் ஏதும் இல்லையென உறுதி செய்யப்பட்ட பிறகே ரயில் அனுப்பிவைக்கப்பட்டது.

  தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து ரயில்வே போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்