Friday, September 03, 2010 2:07 PM IST
Click
திருச்சி
கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி தொடக்கம்

First Published : 06 Nov 2009 05:19:05 AM IST


திருச்சி, நவ. 5:   திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

  கண்காட்சியை மேயர் எஸ். சுஜாதா தொடக்கி வைத்தார். பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் க. சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார்.

  கண்காட்சியில், நாச்சியார்கோவில், மதுரை, வாகைகுளம் ஆகிய ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பித்தளை மற்றும் பஞ்சலோக விளக்குகள், பித்தளை கார்த்திகை அகல் விளக்குகள், 6 முதல் 10 அடி வரை கொண்ட குத்து விளக்குகள், மங்களதீபம், வாசமாலை, திருமலை தீபம், தொங்கு விளக்குகள், காமாட்சி விளக்கு, நவக்கிரக தீபம், அடுக்கு தீபம், அஷ்டலட்சுமி தீபம், கணபதி விளக்குகள், பாலாஜி கிளை விளக்கு, முருகன் வள்ளி தெய்வானை விளக்கு, மூகாம்பிகை விளக்கு, மீனாட்சி தீபம், நெய் விளக்கு, டேபிள் விளக்கு, கணபதி, கருமாரி தொங்கு விளக்கு, பஞ்சலிங்கம் தீபம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளக்குகள் இடம் பெற்றுள்ளன.

  மேலும், ஜெய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட நவரத்தின கல்கள், ராசிக்கேற்ற கல்கள், முத்து நகைகள், சுவாமி மலையில் இருந்து வரவழைக்கப்பட்ட பஞ்சலோக சிற்பங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், தஞ்சை வண்ண ஓவியங்கள், கைத்தறி புடவைகள், படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், ராஜஸ்தான் மற்றும் ஜெய்ப்பூர் வண்ண ஓவியங்கள், ரோஸ் மரத்தில் பதிக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட கார்த்திகை வண்ண அகல் விளக்குகள், விநாயகர் அகல் விளக்குகள் மற்றும் பிற மாநிலப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  

   "ரூ. 10 முதல் ரூ. 38,000 வரையிலான விலையில் இங்கு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

   இந்தக் கண்காட்சி மூலம் ரூ. 4 லட்சத்துக்கு பொருள்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் க. சிதம்பரநாதன்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்