பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீபக் கண்காட்சி
First Published : 07 Nov 2009 04:42:15 AM IST
Last Updated :
தஞ்சாவூர், நவ. 6: தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவ. 9 முதல் 30-ஆம் தேதி வரை கார்த்திகை தீபம் மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர் கரு. சின்னத்தம்பி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்காட்சியில் எங்களது உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட பித்தளை மற்றும் பஞ்சலோக விளக்குகள், மலபார் விளக்குகள், 2 முதல் 6 அடி வரையுள்ள குத்து விளக்குகள், மங்கள தீபம், மொரதாபாத் விளக்குகள், காண்டா விளக்குகள், திருமலை விளக்குகள், திருமலை தீபம், தொங்கு விளக்குகள் வாசமாலை, டெரகோட்டா, வண்ண அகல் விளக்குகள், பிற மாநில கைவினைப்பொருள்கள், துணி வகைகள், தோல் பொருள்கள், நகைகள், கல் சிற்பங்கள், பஞ்சலோக சிலைகள், சந்தன சிற்பங்கள், பேப்பர் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் ரூ. 20 முதல் 20,000 வரையுள்ள பொருள்கள் உள்ளன. குத்து விளக்குகளுக்கு 10 சதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. ரூ. 3 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.