Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
திருச்சி
விக்​டோ​ரியா நினைவு வளைவு அகற்​றம்

First Published : 15 Nov 2009 06:09:20 AM IST


புதுக்​கோட்டை,​ நவ. 14: ​ புதுக்​கோட்டை நக​ரின் மையப் பகு​தி​யில்,​ ஆங்​கி​லேய ராணி விக்​டோ​ரி​யா​வின் ஆட்​சிக் காலத்​தைக் குறிக்​கும் வகை​யில் மன்​னர் காலத்​தில் ​ அமைக்​கப்​பட்ட விக்​டோ​ரியா நினைவு வளைவு சனிக்​கி​ழமை இடித்து அகற்​றப்​பட்​டது.

ஆங்​கி​லே​யர் ஆட்​சி​யில் சிறப்பு அந்​தஸ்து அளிக்​கப்​பட்டு தனி சமஸ்​தா​ன​மாக புதுக்​கோட்டை திகழ்ந்​தது. அப்​போது ஆங்​கி​லேய ராணி விக்​டோ​ரி​யா​வின் ஆட்​சிக் காலத்​தைக் குறிக்​கும் வகை​யில்,​ புதுக்​கோட்டை நக​ரின் கிழக்கு ராஜ வீதி​யின் முகப்​பில் 1896-ல் புதுக்​கோட்​டையை ஆண்ட தொண்​டை​மான் மன்​ன​ரால் நினைவு வளைவு அமைக்​கப்​பட்​டது.

​ ஆங்​கி​லே​யர் ஆட்சி முடி​வுற்று நாடு சுதந்​தி​ர​ம​டைந்த பிறகு நிக​ழாண்​டின் தொடக்​கம் வரை இது பாரம்​ப​ரிய நினை​வுச் சின்​ன​மா​கவே திகழ்ந்​தது. இதைக் ​ கடந்து செல்​லும் வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​கள் இந்த வளை​வின் அருகே நின்று புகைப்​ப​டம் எடுத்​துக்​கொள்​வது ஒரு வழக்​க​மாக இருந்​தது.

​ இந்​நி​லை​யில்,​ கடந்த சில மாதங்​க​ளுக்கு முன் ஒரு நள்​ளி​ர​வில் அடை​யா​ளம் தெரி​யாத வாக​னம் மோதி​ய​தில்,​ இந்த வளைவு சேத​ம​டைந்​தது. எந்​நே​ரத்​தி​லும் இடிந்து விழ​லாம் என்ற சூழல் ஏற்​பட்​டது. இத​னால்,​ வளை​வைச் சீர​மைக்க வேண்​டும் அல்​லது இடித்து அப்​பு​றப்​ப​டுத்த வேண்​டும் என்று பொது​நல ஆர்​வ​லர்​க​ளும் பொது​மக்​க​ளும் குரல் கொடுக்க ஆரம்​பித்​த​னர்.

​ இதைத் தொடர்ந்து,​ பொதுப்​ப​ணித் துறை​யி​னர் மற்​றும் கட்​ட​டத் துறை நிபு​ணர்​கள் அடங்​கிய ஒரு குழு​வி​னர் மூலம் இந்த வளை​வின் எதிர்​கா​லம் குறித்து முடி​வெ​டுக்க மாவட்ட நிர்​வா​கம் நட​வ​டிக்கை எடுத்​தது. அந்​தக் குழு​வி​னர்,​ வளை​வைச் சீர​மைக்க வாய்ப்​பில்லை என்​றும் இடித்து அகற்​று​வதே ஒரே வழி என்​றும் தெரி​வித்​த​தா​கக் கூறப்​பட்​டது. ஆனால்,​ புதுக்​கோட்டை நக​ரில் ஒரு பாரம்​ப​ரிய சின்​ன​மா​கத் திக​ழும் இந்த வளைவை அகற்​றக்​கூ​டாது என்ற குரல்​க​ளும் எழுந்​த​தால்,​ இவ்​வி​ஷ​யத்​தில் ஓர் உட​னடி முடிவை எடுக்க முடி​யா​மல் மாவட்ட நிர்​வா​கம் யோசித்​து​வந்​தது.

​ இந்​நி​லை​யில்,​ மழைக்​கா​லம் தொடங்​கி​விட்​ட​தால்,​ சேத​முற்ற வûüவு தானா​கவே இடிந்து விழக்​கூ​டிய வாய்ப்பு இருப்​ப​தை​யும் அது சேதங்​களை உரு​வாக்​கும் என்​ப​தை​யும் உணர்ந்த மாவட்ட நிர்​வா​கம் சனிக்​கி​ழமை காலை வளைவை இடிக்க உத்​த​ர​விட்​டது. இதன்​படி,​ பொக்​லைன் இயந்​தி​ரங்​கள் மூலம் வளைவு இடித்து அகற்​றப்​பட்​டது. இதன் மூலம் அப்​ப​கு​தி​யில் நீடித்து வந்த ஆபத்​தும்,​ ​ போக்​கு​வ​ரத்து தடை​யும் நீங்​கி​ய​தால் பொது​மக்​கள் மத்​தி​யில் நிம்​மதி ஏற்​பட்​டது.

​ இந்​ந​ட​வ​டிக்​கை​யின்​போது மாவட்ட ஆட்​சி​யர் ஆ. சுகந்தி,​ மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் பா. மூர்த்தி,​ நக​ராட்சி ஆணை​யர் கே. பால​கி​ருஷ்​ணன்,​ மாவட்ட ஊராட்​சித் தலை​வர் ​ சி. முத்​துச்​சாமி,​ நகர்​மன்​றத் துணைத் தலை​வர் க. நைனா​மு​ஹம்​மது உள்​ளிட்​டோர் உடன் இருந்​த​னர்.​ ​

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்