இளைஞர் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூ. பிரமுகர் கைது
First Published : 22 Nov 2009 05:08:36 AM IST
Last Updated :
பொன்னமராவதி,நவ. 21: பொன்னமராவதி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரைச் சேர்ந்தவர் பி. மாணிக்கம் (34). இவர் தனது ஊரில் இருந்து மொபெட்டில் பொன்னமராவதிக்கு வேலைக்கு வந்துள்ளார். மணப்பட்டி அருகே வந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த பொன்னமாரவதி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் மெ. கவிராஜன் (45), ப.சிங்காரம் (46),வெ. சேகர் (33), க. ராஜேஸ்வரி (36), சி. பழனியம்மாள் (45) உள்ளிட்டோர் முன்விரோதம் காரணமாக மாணிக்கத்தை மறித்துத் தாக்கினராம். அப்போது இவர்களைத் தடுக்க முற்பட்ட மணப்பட்டியைச் சேர்ந்த ர. இந்திரா(34), க. மரகதம் (28), ப. அமுதா (32) ஆகியோரையும் தாக்கினராம். தாக்குதலுக்குள்ளானவர்கள் பொன்னமராவதி மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மெ. கவிராஜன், வெ. சேகர், க. ராஜேஸ்வரி, சி. பழனியம்மாள் ஆகியோரைக் கைதுசெய்தனர். ப. சிங்காரம் மற்றும் பலரைத் தேடிவருகின்றனர்.