இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம் அதிமுக மாவட்டச் செயலர் தகவல்
First Published : 24 Nov 2009 12:45:28 AM IST
Last Updated :
வந்தவாசி, நவ. 23: வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுக பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என்று அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் முக்கூர் சுப்பிரமணியன் கூறினார். வேட்பாளர் பி.முனுசாமியை வந்தவாசியில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தி, முக்கூர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது: இடைத்தேர்தலில் நாங்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். திமுக பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம். தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா வருகை தருகிறார். இதனால், கடந்த 3 நாள்களாக அவரது பிரசார பயண வழியை ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.