வாக்களிக்க பணம் வாங்காதீர்: மக்கள் சக்தி கட்சி பிரசாரம்
First Published : 20 Mar 2010 01:22:10 AM IST
Last Updated :
பென்னாகரம், மார்ச் 19: பென்னாகரம் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் வாங்காதீர்கள் என மக்கள் சக்தி கட்சியினர் பிரசாரம் செய்தனர்.பென்னாகரம் நகரில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர்கள், விலை மதிப்பில்லா வாக்குரிமைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டாம். இன்று வாக்களிக்க பணம் கொடுப்பவர்கள் நாளை லஞ்சப் பேர்வழிகளாகவே மாறுவார்கள்.லஞ்சம் இல்லாத வெளிப்படையான அரசு நிர்வாகம், லாபகரமான விவசாயம், மது, புகையிலை ஒழிப்பு, சாதிகள் அற்ற சமுதாயம், அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை வழங்க மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் சிவ. இளங்கோ இதற்கு தலைமை ஏற்றார்.