Friday, September 03, 2010 2:01 PM IST
Click
ஈரோடு
நாளை குளியங்காடு ஸ்ரீகருப்புசாமி கோயில் பொங்கல் விழா

First Published : 08 Sep 2009 10:31:58 AM IST


HTML clipboardஈரோடு, செப். 7: ஈரோடு மாவட்டம், பெரியமோளபாளையம் குளியங்காடு கருப்புசாமி கோயில் பொங்கல் விழா வரும் புதன்கிழமை (செப்.9) நடைபெற உள்ளது.

 கடந்த மாதம் 28-ம் தேதி பூச்சாட்டுடன் பொங்கல் விழா தொடங்கியது.

 இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு (செப்.8) மடப்பள்ளியிலிருந்து சப்பாரத்துடன் வனத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

 புதன்கிழமை காலை 8 மணிக்கு பவானி ஆறுக்கு தீர்த்தம் எடுக்கச்செல்லும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு கோயில் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

 மாலை 2 மணிக்கு பொங்கல் வைத்தலும் நடைபெற உள்ளது.

 இரவு 8 மணிக்கு வானவேடிக்கையுடன் வனத்திலிருந்து புறப்பட்டு 10 மணிக்கு மடப்பள்ளி வந்து சேர்தல் நிகழ்வும் நடைபெற உள்ளன.

 மறு பூஜை மற்றும் மெரவனை ஊர்வலத்துடன் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

 ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்