Friday, September 03, 2010 2:02 PM IST
Click
இந்தியா
செவ்வாய்க்கு விண்கலம்: "இஸ்ரோ' ஆய்வு

First Published : 01 Sep 2009 12:05:28 AM IST


பனாஜி, ஆக. 31:   செவ்வாய்க்கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து இந்திய விண்வெளி மையம் ஆய்வு செய்து வருவதாக அதன் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.
  தற்போது இது வெறும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. செவ்வாய்க்கிரகத்தில் ஆய்வு நடத்த விரும்பும் பிற நாடுகளிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டப் பணியை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும். 2013-15-ம் ஆண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.
  சந்திராயன்-2 திட்டத்துக்குப் பிறகே இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
  கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சந்திராயன்-1 திட்டம் மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அது கைவிடப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கோவாவில் நடைபெறும் 8-வது சர்வதேச குறைந்த செலவிலான விண்வெளி பயண திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த அவர், பல நாடுகள் குறைந்த செலவிலான விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறினார்.. சந்திராயன் -1 திட்டப் பணிக்கான செலவு ரூ. 400 கோடி. இதேபோல குறைந்த செலவிலான பயண திட்டத்தையே செவ்வாய்க்கிரக திட்டத்துக்கும் வகுக்க உள்ளதாக அவர் கூறினார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்