Tuesday, February 09, 2010 4:47 PM IST
Click
முக்கியச் செய்திகள்
இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க காங்கிரஸ் தவறிவிட்டது: ராஜ்நாத் சிங்

First Published : 06 Oct 2009 12:18:00 AM IST


நாசிக், அக். 5:   இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க காங்கிரஸ் தவறி விட்டது என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.

  மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாசிக்கில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். சத்பூர் பகுதியில் பாஜக வேட்பாளர் ராகுல் அஹேரை ஆதரித்து பேசுகையில் ராஜ்நாத் சிங் மேலும் கூறியது:

  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 55 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி புரிந்துள்ளது. இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது.

  ராணுவ ரீதியில் இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கவில்லை. இதனால்தான் இந்தியாவிற்குள் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டுகிறது. அருணாசலப் பிரதேசத்தில், சீன ராணுவம் ஊடுருவ முயற்சிக்கிறது.

  போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடைபெற்ற ஊழலில் முக்கிய நபரான இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சியை விடுவிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.

  மாநிலத்தில் தலை விரித்தாடும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் - தேசியவாத கூட்டணி ஆட்சியே காரணம். அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்துக்கும் காங்கிரஸ் அரசே காரணம் என்றார்.

  மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானவை. இதனாலேயே இம்மாநிலத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று குற்றம் சாட்டினார் ராஜ்நாத் சிங்.
கருத்துக்கள்

நன்றாகச் சொன்னீர்கள். வலுவான நாடாக மட்டுமல்ல; ஒற்றுமையான, ஒழுக்கமான, நேர்மையான நாடாகவும் உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்பதும் உண்மை. காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது என்று கூறியதால், இவர்கள் ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டு சீரழித்து விட்டார்கள்.

By Murugadoss K
10/6/2009 9:00:00 PM

EXACTLY ,, YOU ARE CORRECT,, BECAUSE OF THE FAMILY POST,, AND IF IT IS CAPABLE OR NOT ,,WHAT ABOUT THE MR. RAJEEV GANDHI CASE? BOFORS CASE? MR. MONMOHAN IS A DUMMY P.M.,, HE HAS NO POWER TO DO INDEPENDENTLY ANY THINGS ,, VERY POOR INDIA.. WE HAVE TO FACE THIS UGLY GOVERNMENT ,, THE GOVERNMENT ALWAYS TO RISQUE THE CRIMINALS,, FIVE YEARS BACK NO BODY KNOWS ABOUT THE MR. RAGUL.. NOW HE IS TOP LEADER.. WHAT HE DID FOR THE NATION? NOTHING,, HE IS ONLY A TRADE OF MS.SONIYA ,,IF IT IS ENOUGH TO RULE INDIA?WHERE WE ARE GOING?

By SATHISH
10/6/2009 12:53:00 PM

sari shut up and go take the trouser and meet RSS chief

By vela
10/6/2009 8:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்