இந்திய நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை: கசாப்
First Published : 13 Oct 2009 12:29:38 AM IST
Last Updated :
மும்பை, அக். 12: இந்திய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லை எனவும், மும்பை தாக்குதல் சம்பவ வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் சிறப்பு நீதிமன்றத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாதி அஜ்மல் கசாப் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹிலியானி திங்கள்கிழமை நிராகரித்தார்.
வழக்கு விசாரணை முறையாகப் பதிவு செய்யப்படாததால் வேறு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என மும்பை தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொருவரான ஃபாஹிம் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.
வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சி இது எனக் கூறி அவரது மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.