Friday, September 03, 2010 2:07 PM IST
Click
முக்கியச் செய்திகள்
டிஐஏஎல், விப்ரோ ஒப்பந்தம்

First Published : 24 Oct 2009 09:38:00 PM IST


சென்னை, அக். 23: விப்ரோ நிறுவனத்துடன் தில்லி சர்வதேச விமானநிலைய நிறுவனம் (டிஐஏஎல்) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி விமான நிலையத்துக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் 10 ஆண்டுகளுக்கு விப்ரோ நிறுவனம் அளிக்கும். இதன்படி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குதல் அதை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விப்ரோ நிறுவனம் மேற்கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின்படி தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள 3-வது நுழைவாயில் (டெர்மினல் 3) காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான சிறப்பு வாயிலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் கூட்டாக ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி உருவாக்கப்படும் புதிய நிறுவனத்தில் 74 சதவீத பங்குகள் விப்ரோ வசம் இருக்கும் டிஐஏஎல் நிறுவனம் எஞ்சிய 26 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்