ஜம்மு காஷ்மீர் பேரவையில் கடும் அமளி
First Published : 28 Aug 2009 11:15:00 PM IST
Last Updated :
HTML clipboardஸ்ரீநகர், ஜூலை 27: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்
முதல்நாளான திங்கள்கிழமை அந்த மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக்
கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அக்கட்சித் தலைவர்
மெஹபூபா முஃப்தி மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேரவையைவிட்டு கூண்டோடு
வெளியேற்றப்பட்டனர்.
காஷ்மீர் மாநில பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அவை
காலை 10 மணிக்கு கூடியதும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்
செüத்ரி முகமது ரம்ஜான், ஒரு முக்கிய விஷயம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க
வேண்டும் என பேரவைத் தலைவர் முகமது அக்பரிடம் கோரினார். இதற்கு பேரவைத் தலைவரிடம்
இருந்து பதில் வருவதற்கு முன்னதாகவே மெஹபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி
உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சோபியான் மாவட்டத்தில் சமீபத்தில் இரு பெண்கள் கொல்லப்பட்டதுதான்
எல்லாவற்றையும்விட முக்கியமான விவகாரம். எனவே அதுகுறித்து விவாதிக்க முதலில்
அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் பேரவைத் தலைவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் மெஹபூபா உள்பட
மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் தங்களது
இருக்கையைவிட்டு எழுந்து பேரவைத் தலைவர் இருக்கை அருகில் வந்து, தங்களது கோரிக்கையை
மீண்டும் வலியுறுத்தினர்.
ஆனால் பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதனால் கோபமடைந்த மெஹபூபா, பேரவைத் தலைவர் மேஜையின் மீதிருந்த மைக்கை தூக்கி
வீசினார். அவரது கட்சி உறுப்பினர்களும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் பொறுமையிழந்த பேரவைத் தலைவர் முகமது அக்பர், மெஹபூபாவை நோக்கி "இந்த
பெண்ணை வெளியேற்றுங்கள்' என்று பேரவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பேரவைத் தலைவர் இவ்வாறு கூறியதும் மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்
மெஹபூபாவை சூழ்ந்து கொண்டனர். அவரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மெஹபூபா உள்பட மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும்
வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து மெஹபூபா உள்பட அவரது கட்சி
உறுப்பினர்கள் அனைவரும் பேரவையைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
மெஹபூபா விமர்சனம்: இந்நிலையில் தாங்கள் வெளியேற்றப்பட்டதற்கு மெஹபூபா
பேரவையின் வெளிப்புறம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். அவர் பேரவைத் தலைவர்
முகமதுவின் நடவடிக்கையை விமர்சித்தார்
பேரவைத் தலைவர் என்பவர் கட்சி பேதமின்றி நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பேரவைத் தலைவர் முகமது அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவர் ஆளும் தேசிய
மாநாட்டுக் கட்சிக்காரரைப் போல நடந்து கொண்டார்.
பேரவையின் மாண்பைக் குலைக்கும் வகையிலும் அவர் மோசமான வார்த்தைகளை
பிரயோகித்தார். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுகூட அவருக்கு
தெரியவில்லை என்றார் மெஹபூபா.
நான் மைக்கை தூக்கி வீசியதாகக் கூறுகிறார்கள். அது பொய்யான தகவல். நான்
மைக்கின் மீது இலேசாக அடித்தேன். அவ்வளவுதான். பேரவைத் தலைவர் மோசமான வார்த்தையை
பிரயோகித்ததால் எனக்கு வேறுவழி தெரியவில்லை என்றும் மெஹபூபா கூறினார்.
உமர் அப்துல்லா எதிர்ப்பு: இதனிடையே, மெஹபூபா உள்பட மக்கள் ஜனநாயகக் கட்சி
உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் முதல்வர் உமர் அப்துல்லா.