Saturday, July 31, 2010 4:14 AM IST
Click
இந்தியா
மீண்டும் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம்

First Published : 01 Oct 2009 11:12:00 PM IST


நியூயார்க், செப். 30:   மும்பை தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

   இதை அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கான திட்டம் தீட்ட கராச்சியில் 4 வீடுகள், 2 பயிற்சிமுகாம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  பாகிஸ்தான் முன்னாள் ராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் சிலர், மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலருக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

  இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்