Friday, September 03, 2010 1:57 PM IST
Click
இந்தியா
பாகிஸ்தான் குறித்து ராகுல் தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம்

First Published : 15 Oct 2009 02:33:18 AM IST


புது தில்லி, அக். 14: இந்தியாவில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், அந்நாட்டைப் பற்றி அதிக நேரம் பேசி நேரத்தை வீணடிக்கின்றனர். இது தேவையற்ற ஒன்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி குறிப்பிட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

  ஹிமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் காங்கிரஸ் சார்பு இந்திய தேசிய மாணவர் அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை சிம்லா சென்ற ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  பாகிஸ்தான் குறித்து பேசுவதற்கு 5 நிமிடத்தைக்கூட நான் ஒதுக்கமாட்டேன். ஏனென்றால் அந்நாட்டைப் பற்றி பேசுவதற்கு அங்கு ஒரு சிறப்பும் இல்லை என்றும் அவர் அப்போது கூறினார்.

  இதுகுறித்து விமர்சித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் தேவையில்லையென்றால் பின்னர் ஏன் எகிப்தில் அந்த நாட்டுடன் இணைந்து கூட்டு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்