கைதான அமெரிக்க விஞ்ஞானியால் இஸ்ரோவுக்கு ஆபத்தில்லை: அதிகாரி
First Published : 22 Oct 2009 02:19:01 AM IST
Last Updated :
பெங்களூர், அக். 21: சந்திரயான்-1 செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய அமெரிக்கா விஞ்ஞானியால் இஸ்ரோவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ். சதீஷ் பெங்களூரில் புதன்கிழமை கூறியதாவது:
இஸ்ரேல் நாட்டுப் புலனாய்வுத்துறைக்கு உளவு பார்த்தாக ஸ்டீவர்ட் டேவிட் நொஜித்டெ என்ற அமெரிக்க விஞ்ஞானியை அமெரிக்க புலனாய்வுத் துறை போலீஸôர் கைது செய்துள்ளனர். இவர், சந்திரயான்-1 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றியவர்.
ஸ்டீவர்ட் சந்திரயான் திட்டத்தில் பணியாற்றினாரே தவிர இஸ்ரோவுக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. ஸ்டீவர்ட்டிடம் செயற்கைக்கோள் திட்டங்கள் பற்றிய ரகசியங்கள் ஏதும் இல்லை. இதனால் இஸ்ரோவின் பாதுகாப்புக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஸ்டீவர்ட் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம்.
அதில் இஸ்ரோவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இஸ்ரோ பாதுகாப்பில் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.