Tuesday, February 09, 2010 8:15 PM IST
Click
இந்தியா
மகாராஷ்டிரம், ஹரியாணாவுக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் நியமனம்

First Published : 24 Oct 2009 11:32:00 PM IST


புது தில்லி, அக். 23: தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மகாராஷ்டிரம், ஹரியாணா, அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
  மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோனி, திக்விஜய் சிங், கே. ரஹ்மான் கான் ஆகியோர் மகாராஷ்டிர மாநில பார்வையாளர்களாகவும், கட்சியின் பொதுச் செயலர்கள் பிரித்வி ராஜ் சவாண், மோஷினா கித்வாய், பி.கே. ஹரிபிரசாத் ஆகியோர் ஹரியாணா மாநில மேலிடப் பார்வையாளர்களாகவும், அருணாச்சலப் பிரதேசத்துக்கு ஆஸ்கர் பெர்ணான்டஸ், லூயிùஸன்ஹோ ஃபெலீரோ, வி. நாராயணசுவாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  இவர்கள் அந்த மாநில முதல்வரைத் தேர்வு செய்யும் பணியை மேற்கொள்வார்கள்.

இத் தகவலை காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

  மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அருணாசலப் பிரதேசத்திலும் அக்கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆனால் ஹரியாணாவில் மட்டும் ஆட்சியமைக்க மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்