ஸ்ரீநகர் அருகே தீவிரவாதி சுட்டுக்கொலை: 2 பேர் கைது
First Published : 25 Oct 2009 12:59:25 AM IST
Last Updated :
ஸ்ரீநகர், அக். 24: காஷ்மீர் மாநிலத்தின் பாராமுல்லா மாவட்டத்தில் வாட்டர்ஹேம் பகுதியில் நுழைந்த தீவிரவாதியை சனிக்கிழமை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். மேலும் 2 பேரையும் போலீஸôர் கைது செய்தனர்.தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவ முகாமில் புகுந்து, தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி தாக்க முயன்றார். இதனால் அவரை, ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்தார். இறந்த தீவிரவாதி பற்றிய அடையாளங்கள் இதுவரை தெரியவில்லை.இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் போலீஸôர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதியை, அவரது மனைவியுடன் சனிக்கிழமை கைது செய்தனர்.ஸ்ரீநகரிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷீரி பாரமுல்லாவின் ஜீலம் ஸ்டேடியம் அருகே உள்ள தனது வீட்டிற்கு முகமது ரம்ஸôன் லோனே என்கிற தில்நவாஸ் என்னும் தீவிரவாதி வந்திருப்பதாக தகவலறிந்து போலீஸôர் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதியை, மனைவி ஷாஸியா லத்தீப்புடன் போலீஸôர் பிடித்தனர்.