Tuesday, February 09, 2010 9:21 PM IST
Click
இந்தியா
அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை

First Published : 26 Oct 2009 11:58:00 PM IST


இம்பால், அக். 25:    மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இத்தகவலை, அம்மாவட்ட போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

  லேங்டம் பகுதியில் போலீஸ் கமாண்டோக்களுடன் சனிக்கிழமை இரவு நடத்திய என்கவுன்ட்டரில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு என்கவுன்ட்டரில் மேலும் இரண்டு அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நாஹரூப் பகுதியில் கொல்லப்பட்டனர்.

  9 மி.மீ. பிஸ்டல் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் மற்றும் சில ஆயுதங்களையும் அந்த இடங்களிலிருந்து போலீஸôர் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மண்டல மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

  தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்