மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
First Published : 01 Nov 2009 10:57:51 PM IST
Last Updated :
இம்பால் (மணிப்பூர்), நவ.1: மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் 7 தீவிரவாதிகள், அஸ்ஸôம் மாநில ரைபிள் பாதுகாப்பு படையினரால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். இம்பாலில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள அந்த்ரோ பகுதியில் ரைபிள் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றபோது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளில் 4 பேர் ராணுவ உடைகளையும், மற்றவர்கள் சாதாரண உடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள மண்டல அறிவியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்த சிலரை பாதுகாப்பு படையினர் இழுத்து சென்று சுட்டுக்கொன்றதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ராணுவ தரப்பில் உடனடியாக எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.