Tuesday, February 09, 2010 9:20 PM IST
Click
இந்தியா
போபர்ஸ் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் 30-ல் விசாரணை

First Published : 10 Nov 2009 01:58:53 AM IST


புது தில்லி, நவ. 9: போபர்ஸ் வழக்கு தொடர்பான விசாரணையை நவம்பர் 30-ல் மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
  இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுவதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
  எனினும், சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா ஆகியோரது வேண்டுகோளை ஏற்று நவம்பர் 30-ல் வழக்கு விசாரணையை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் திங்கள்கிழமை ஒப்புக் கொண்டனர்.
  போபர்ஸ் வழக்கின் முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாததால் வழக்கை முடித்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அண்மையில் மனு தாக்கல் செய்தது.

கருத்துக்கள்

This is no so far the tamilnadu government action against heavy rain

By Mubeen
11/10/2009 7:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்