Tuesday, February 09, 2010 9:22 PM IST
Click
இந்தியா
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதலுக்கு சதி: மன்மோகன் சிங்

First Published : 21 Nov 2009 11:04:00 PM IST


புது தில்லி, நவ. 20: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை தாக்குதல் போன்று மேலும் பல தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

 அமெரிக்காவுக்கு அரசுமுறைப்பயணமாக செல்ல உள்ளார் பிரதமர். அவரது பேட்டி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் {அவர் அமெரிக்கா போய்ச்சேரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

 மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்திய தாக்குதல்களைப் போல மேலும் பல தாக்குதல்களை  நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்ற அதிர்ச்சிகர தகவல்களை அன்றாடம் உளவு அமைப்புத் தகவல்கள் கொடுத்தபடி உள்ளன.

 இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசுத் தரப்பிலிருந்து ஊக்கமும் ஆதரவும் கிடைக்கிறது என்பதுதான் வேதனையும் வருத்தமும் தரும் விஷயமாகும். கடந்த 25 ஆண்டுகளாகவே பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாத செயல்களுக்கு பலிகடாவாகி வருகிறது இந்தியா.

  இருப்பினும் இந்தியாவின் மூலமாக  தனக்கு அச்சுறுத்தல் வருமோ என்று பாகிஸ்தான் அஞ்சத்தேவையில்லை. அதனுடன் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

   இதற்கு பாகிஸ்தான் செய்யவேண்டியது ஒன்றுதான். இந்தியாவுக்கு எதிராக அந்த நாட்டில் உள்ள தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள இடம் தரக்கூடாது. அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை கூண்டோடு அழிக்கவேண்டும். இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வரும்.

 பயங்கரவாதமே பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருக்கும் நிலையை பார்க்கும்போது பரிதாபப்பட வேண்டிவருகிறது.

  பயங்கரவாத பாதையைவிட்டு பாகிஸ்தான் விலகிவர அமெரிக்கா தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் என இந்தியா விரும்புகிறது.

 கடந்த ஆண்டு மும்பை மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது போதிய அளவுக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.  அந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது  ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

  பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரிப்பு: பாகிஸ்தானில் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்தநாட்டின் பல பகுதிகள் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலை நீடித்தால் அது இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் தருவதாகவே அமையும். தலிபான், அல் காய்தா தீவிரவாதிகள் அட்டகாசம் பாகிஸ்தானின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே அதிகாரத்தை செலுத்த முடியாத அளவுக்கு தீவிரவாதிகளின் கை மேலோங்கியுள்ளது. இது எங்குபோய் முடியும் என்று தெரியவில்லை.

 மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரைமனதுடன் செயல்படுவதாகவே தோன்றுகிறது. தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவிசெய்கிறது.

  ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே நோக்கமா என்றால் இல்லை என்று தான் சொல்லமுடியும். தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறியதுமே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறவேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம்.  ஆப்கானிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம். தலிபான்களுக்கு எதிராக முழுமனதுடன் பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார் மன்மோகன் சிங்.

கருத்துக்கள்

இந்த நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்படும் - பெங்களூர் டாக்டரை கைது செய்ததால் அவரது தாய் அழுததை பார்த்து அன்று இரவு நான் தூங்கவில்லை. இது முன்மோகன் உதிர்த்த முத்துகள். இதோ ஆயிரக்கணக்கான காஷ்மீர் பெண்களும், மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் வீட்டு பெண்களும் நாடு முழுவதும் அழுவது பிரதமரது காதில் விழவில்லை. இந்தியாவில் நடக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு பாக் உதவி செய்வது இந்திய எதிர்ப்பு மனப்பான்மையில். ஆனால் இந்தியாவில் உள்ள பல முஸ்லிம்கள் அதற்கு ஊக்கமும் ஆதரவும் தருவது பற்றி அமெரிக்காவில் என்ன பதில் சொல்வீர்கள் சார்! பாக் எதிர்காலம் எங்கு போய் முடிந்தால் உமக்கென்ன சாமி! இந்த மாதிரி பிரதமரெல்லாம் இருந்தால் இந்தியா என்ன ஆகும் என்று எங்களுக்கு கவலையாக கீதுபா!

By ravikumar
11/21/2009 9:21:00 PM

MAKKU MOHAN WHY YOU ARE SPAEKING LIKE A SCHOOL CHILDREN .INSTEAD OF BLABBERING YOU AND IMPORTED SONIA CAN DO ONE THING TO DIVDE THE COUNTRY IN PIECES AND QURTER TO PAK AND HALF TO CHINA (BIG BOSS) AND SOME TO SRILANKA EVEN YOU CANNOT PROTECT THE FISHER MANS AND REST OF THE THINGS MAOIST, BECAUSE WE PEOPLE HAVE NO CONFIDENCE AGAINST YOU AND WE BETTER TO LIVE AS SLAVES. BECAUSE, INDIANS ARE PRACTISED WELL UNDER RULED BY OTHERS .AFTER INDIRA YOU DONT HAVE ANY STABLE POLICY AGAINST THE EXTERNAL ISSUES . THERE WAS AN IMAGE FOR THE COUNTRY AND PITY FOR THAT 100 CRORE PEOPLE RULED BY COWARDS STUPIDS AND IN CAPABLE AND UNFIT PERSONS MAKING SWINDLING MONEY AND DOING TO THE PUBLIC

By MOO
11/21/2009 10:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்